மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

தினத்தந்தி

மாவு தயாரித்தல்: மைதாவில் உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கு வேகவைத்தல்: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்றாக மசிக்கவும்.

மசாலா தயாரித்தல்: கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்தல்: நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

உருளைக்கிழங்கு சேர்த்தல்: மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.

சமோசா வடிவம்: மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து நீளமாகத் தேய்த்து இரண்டாக வெட்டவும்.

பூரணம் வைத்தல்: மாவை கூம்பு வடிவில் மடித்து உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பி ஓரங்களை நன்றாக ஒட்டவும்.

மிதமான தீயில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும். சுவையான மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார்! புதினா சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்!

10 நிமிடத்தில் சுவையான வாழைக்காய் பொரியல்!