10 நிமிடத்தில் சுவையான வாழைக்காய் பொரியல்!

தினத்தந்தி

வழக்கமாக வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக, தேங்காய் மற்றும் மசாலா சேர்த்து இந்தச் சுவையான வாழைக்காய் வறுவலைச் செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இதை எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; வாழைக்காய் – 1, வெங்காயம் – 1, மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி, எண்ணெய் – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை; தேங்காய்த் துருவல் – ¼ கப், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – 1 தேக்கரண்டி

தாளிக்க வேண்டியவை; கடுகு – 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை; முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

தேங்காய்த் துருவல், 3 காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், நறுக்கிய வாழைக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் தெளித்து, கடாயை மூடி மிதமான தீயில் வாழைக்காய் மென்மையாக வேகும் வரை சமைக்கவும். இடையிடையே கிளறிவிடவும்.

வாழைக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவைச் சேர்த்துக் கிளறவும். மேலும் 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி இறக்கவும். இப்போது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்! இதைச் சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறலாம்.

குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக்கோழி சுக்கா - சுவை அள்ளும்!