மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினசரி உணவுகள்!

தினத்தந்தி

ஒமேகா 3 கொழுப்புகள் - ஒமேகா 3 கொழுப்புகள், மூட்டு பகுதியில் அழற்சி சமிக்ஞைகளை சமநிலைப்படுத்த உதவிடும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், மூட்டு இயக்கத்தை மேம்படுத்தவும் உதவலாம்.

Photo: magnific

வாரத்திற்கு இரண்டு முறை சால் மன், மத்தி அல்லது கானாங்கெளுத்தி மீன்களை உட்கொள்ளலாம். சைவ உணவு உண்பவராக இருந்தால் தினமும் ஆளிவிதை, சியா, வால்நட் உட்கொள்ளலாம். ஆளி, சியா விதைகளை அரைத்து தயிர், ஓட்ஸ் கலந்தும் சாப்பிடலாம்.

Photo: magnific

மஞ்சள் மற்றும் மிளகு - மஞ்சளில் உள்ள குர்குமின், உடலின் அழற்சி எதிர்ப்பு தன்மைக்கு ஆதரவளிக்கும். மிளகில் உள்ள பைப்பரின், உடல் அதை சிறப்பாக உறிஞ் சிக்கொள்ள உதவிடும். சூடான பாலில் மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பருகலாம்

Photo: magnific

எள் மற்றும் பாதாம் - எள், பாதாம் இவை இரண்டும் மூட்டுகளை சுற்றியுள்ள தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கால்சியம், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய வற்றையும் வழங்கக்கூடியவை.

Photo: magnific

வறுத்த எள்ளை சாலடுகள், கிச்சடியில் தூவி ருசிக்கலாம். எள் சட்னி, எள்ளுப்பொடி தயாரித்து இட்லி, தோசை சாப்பிடலாம்.

Photo: magnific

பால் பொருட்கள் - கால்சியம், வைட்டமின் டி இவை இரண்டும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். தினமும் தயிர் அல்லது ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம்.

Photo: magnific

வண்ணமயமான பழங்கள் மற்றும் பெர்ரி பழங்கள் - ஒரு கிண்ணத்தில் ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, கிரான் பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள், மாதுளை, ஆரஞ்சு பழங்களை கலந்து உட்கொள்ளலாம்.தக்காளி மற்றும் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Photo: magnific

வைட்டமின் சி பொருட்கள் - எலுமிச்சை, நெல்லிக்காய், குடைமிளகாய் போன்ற வைட்டமின் சி கலந்த பொருட்களை உட்கொள்வது உடல் கொலாஜனை உருவாக்க வழிவகை செய்யும். அது குருத்தெலும்புகளை வலுப் படுத்த துணைபுரியும்.

Photo: magnific
சமையலில் பூண்டு சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!