சுவையான & ஆரோக்கியமான உளுந்தக்கஞ்சி பாயசம்!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: உளுந்து (உளுந்து பருப்பு) – 1/2 கப், அரிசி – 2 டேபிள்ஸ்பூன், பனை வெல்லம் – 1 கப், தேங்காய் பால் – 1 கப், ஏலக்காய் – 3 (அரைத்தது), முந்திரி – 10, நெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – தேவைக்கு

செய்முறை :உளுந்தையும் அரிசியையும் லேசாக வறுத்து, கழுவி வைக்கவும்.

அதை குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

வெந்த உளுந்து கலவையில் வெல்லச் சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.

அதில் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு :மிகவும் ஆரோக்கியமான பானம், குறிப்பாக பெண்களுக்கு நல்ல பலன் தரும். உடல் பலம், சக்தி அதிகரிக்க உதவும்.

5 நிமிடத்தில் ரெடி ஆகும் சுவையான வெஜ் சாண்ட்விச்!