சாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்!

தினத்தந்தி

சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் : சிக்கன் துண்டுகள் 1 கிலோ, கொத்தமல்லி இலை - 2 கட்டு, புதினா இலை - 1 கட்டு, வெங்காயம் -3, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை, மிளகாய் -4 , தயிர் 250 மில்லி லிட்டர், தனியா தூள் -3 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு-எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை : முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும். அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

கொழுப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!