சூப்பரான வெண்டைக்காய் பொரியல்!

தினத்தந்தி

ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 1, பூண்டு - 2 பல், தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி, ஒரு துணியால் துடைத்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன்பின் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து கிளறி, வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும்.

வெண்டைக்காய் வெந்ததும், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும். சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்!

சாதத்திற்கு சூப்பர் சைடு டிஷ்: கத்திரிக்காய் தக்காளி தொக்கு செய்வது எப்படி?