தினத்தந்தி
தேவையான பொருட்கள்: மட்டன் மூளை - 5, சின்ன வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், சீரக தூள் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதில் மட்டன் மூளையை போட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பின்னர் எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதன்பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
தக்காளி நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்ததும், நறுக்கிய மட்டன் மூளை சேர்த்து கலந்து, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
தண்ணீர் வற்றி திக்கான பதம் வந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் மூளை மிளகு மசாலா தயார்