சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முட்டை குருமா!

தினத்தந்தி

சப்பாத்தி, தோசை, இட்லி, நாண், இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை குருமா ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: முட்டை – 5, இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு, தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, சோம்பு – சிறிதளவு, கிராம்பு – சிறிதளவு, கசகசா – சிறிதளவு, தேங்காய் துருவல் – ¼ கப், மஞ்சள் தூள் – சிறிதளவு, மிளகாய் தூள் – சிறிதளவு, சாம்பார் பொடி – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு, உப்பு – தேவைக்கு.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகளை வேகவைத்து தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் துருவலை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதில் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த முட்டைகளை சேர்த்து மெதுவாக கிளறவும்.

அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.

கேரள ஸ்பெஷல் 'இதழ் அப்பம்'!