தினத்தந்தி
தேவையான பொருட்கள்: பனீர் (சிறுதுண்டுகளாக வெட்டியது) - 250 கிராம், பெரிய வெங்காயம் (நறுக்கியது) -2, தக்காளி (நறுக்கியது ) -2, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மேலும் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், தனியா தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - ½ டீஸ்பூன்
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை கிளறவும்.
தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வேக விடவும். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலக்கி நன்கு வேகவிடவும்.
இறுதியில் கரம் மசாலா சேர்த்து இறக்கி, மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம்.