தினத்தந்தி
1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்தவர் இயக்குநர் பாரதிராஜா.
தமிழ் திரையுலகில் கிராமிய மணத்தை கொண்டு வந்த முன்னோடி இயக்குநர்களில் முக்கியமானவர் இவர்.
1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மொத்தம் 44க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார்.
'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் திரையுலகில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்ட கலைஞராக திகழ்ந்தார்.
பல புதிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு.
ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் இயற்கைச் சூழலுக்கு கொண்டு சென்று புதிய பாதையை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்கே சொந்தம்.
திரைத்துறைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி 2004ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாரதிராஜா(84) உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.