ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்?

தினத்தந்தி

ரோஜா செடிகளை விரும்பி வளர்ப்பவர்கள் பலர். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் செடிகள் விரைவில் வாடிவிடுவதோ அல்லது பூக்கள் குறைவாக பூப்பதோ ஏற்படலாம்.

ரோஜா பூக்களை பறிக்கும் போது காம்பை மட்டும் பறிக்காமல், அதனுடன் இரண்டு இலைகளையும் சேர்த்து வெட்ட வேண்டும். இதனால் புதிய துளிர்கள் விரைவாக உருவாகும்.

ரோஜா செடி வாங்கும்போது அதிக துளிர்களும், ஐந்து இலைகள் கொண்ட ஆரோக்கியமான செடிகளையும் தேர்வு செய்வது நல்லது.

சமையலறை கழிவுகளான டீத்தூள், காபித்தூள், வெங்காயத் தோல், பூண்டுத் தோல், முட்டை ஓடு போன்றவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

இந்தக் கழிவுகளை மணலுடன் கலந்து ஒரு வாரம் மக்கவைத்து உரமாக போட்டால் ரோஜா செடி செழிப்பாக வளரும்.

பழைய சாதம் வடித்த நீரை செடிகளுக்கு ஊற்றினால் மண்ணின் ஊட்டச்சத்து அதிகரித்து செடியின் வளர்ச்சி மேம்படும்.

வாழைப்பழத் தோலை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால் பூப்பதற்கான சக்தி அதிகரிக்கும்.

உரம் வைக்கும் நாளில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் இருப்பதும், மாலை நேரத்தில் உரம் இடுவதும் சிறந்த பலனை தரும்.

கொளுத்தும் கோடையில் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்கள்!