தீபாவளி ஸ்பெஷல் - தீபாவளி லேகியம்!

தினத்தந்தி

தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டதால் ஏற்படும் அஜீரணத்தைத் தவிர்க்க பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் தீபாவளி லேகியம்!

தேவையான பொருட்கள்: சுக்கு – 50 கிராம், மிளகு – 50 கிராம், திப்பிலி – 50 கிராம், சதகுப்பை – 30 கிராம், சிறுநாகப்பூ – 50 கிராம், வாய்விடங்கம் – 50 கிராம், கருஞ்சீரகம் – 50 கிராம், சீரகம் – 50 கிராம், இலவங்கப்பட்டை – 50 கிராம், கோரைக்கிழங்கு – 50 கிராம், கொத்தமல்லி – 30 கிராம், சித்தரத்தை – 30 கிராம், ஓமம் – 30 கிராம், அதிமதுரம் – 20 கிராம், கிராம்பு – 20 கிராம், வெல்லம் – 300 கிராம், தேன் – 100 கிராம், நெய் – 100 மி.லி.

செய்முறை; அனைத்து மூலிகைப் பொருட்களையும் தனித்தனியாக மிதமான தீயில் வறுக்கவும்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் பாகு காய்ச்சி, கம்பிப் பதம் வந்ததும் பொடிகளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

சிறிது ஆறியதும் தேன் சேர்த்துக் கலந்து பாத்திரத்தில் சேமிக்கவும்.

முக்கியக் குறிப்பு: இது பாரம்பரிய உணவுக் குறிப்பு. அஜீரணம், வாந்தி, வயிற்றுவலி போன்றவற்றுக்கு நிரூபிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாகக் கருதக்கூடாது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், நீண்டகால நோயுள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி இந்த மூலிகைக் கலவையை உட்கொள்ள வேண்டாம்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய 7 பாதுகாப்பு வழிமுறைகள்!