தினத்தந்தி
வெறும் கடாயில் 1 கப் பச்சைப் பாசிப்பயறைச் சிவக்க வறுத்து ஆறவிடவும்; அதேபோல் 2 டேபிள் ஸ்பூன் எள் மற்றும் ½ கப் துருவிய தேங்காயையும் தனித்தனியே ஈரப்பதம் போக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஆறிய பாசிப்பயறை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் 1 கப் பொடித்த வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்து லேசான பிசுபிப்புத் தன்மை வந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
சூடான வெல்லப் பாகை பாசிப்பயறு கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறி விடவும்.
கலவை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே நெல்லிக்காய் அளவு சிறு உருண்டைகளாகப் பிடித்து, 3 அல்லது 4 உருண்டைகளை ஒன்றாகச் சேர்த்து லேசாக அழுத்தி 'கொத்து' போல ஒட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் 1 கப் வறுத்த பச்சரிசி மாவு, ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 சிட்டிகை உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, தயார் செய்த உருண்டைக் கொத்துகளை அரிசி மாவில் முக்கி எடுத்து, மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார்