பழைய ஸ்டைலை விடுங்க... இந்தத் தீபாவளிக்கு இப்படி சிக்கன் குழம்பு செஞ்சு பாருங்க, சுவை அள்ளும்!

தினத்தந்தி

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், கார வகைகள் மட்டுமின்றி அசைவ உணவுகளும் விருந்தில் முக்கிய இடம் பிடிக்கும். அந்த வகையில் மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் சுவையான சிக்கன் குழம்பை இந்தத் தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து அசத்தலாம். இந்தக் குழம்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; சிக்கன் – 1 கிலோ, துருவிய தேங்காய் – ¼ கப், சின்ன வெங்காயம் – 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி, மல்லித்தூள் – 2 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 1 தேக்கரண்டி, பிரியாணி இலை – 2, சோம்பு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை; முதலில் சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து கழுவி, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகப் பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

வதக்கிய மசாலாவை மிக்ஸியில் போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் ஊறவைத்த சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் சுமார் 10 நிமிடங்கள் சிக்கனை வேகவிடவும். இடையிடையே கிளறிவிடவும்.

இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். மிதமான தீயில் சிக்கன் நன்றாக வெந்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் சுவையான சுசியம் செய்வது எப்படி?