தீபாவளி ஸ்பெஷல் - மொறு மொறு முறுக்கு!

தினத்தந்தி

தீபாவளி என்றாலே இனிப்பு, காரம் எனப் பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக மொறு மொறுப்பான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; பச்சரிசி – 1 கிலோ, பொட்டுக்கடலை – 150 கிராம், உளுந்தம்பருப்பு – 100 கிராம், வெண்ணெய் – 50 கிராம், ஓமம் – 1 தேக்கரண்டி, எள் – 1 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை; முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவி, வெயிலில் ஈரம் இல்லாமல் காயவைத்துக் கொள்ளவும்.

உளுந்தம்பருப்பை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையையும் லேசாக வறுத்து ஆறவிடவும்.

பச்சரிசி, உளுந்தம்பருப்பு, பொட்டுக்கடலை ஆகிய மூன்றையும் மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து நைசாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும். கடையில் கிடைக்கும் முறுக்கு மாவையும் பயன்படுத்தலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மாவைக் கொட்டி, அதனுடன் ஓமம், எள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் வெண்ணெய் சேர்த்து மாவுடன் நன்றாகப் பிசிறிக் கொள்ளவும்.

சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, கையில் ஒட்டாத மென்மையான பதத்தில் மாவைப் பிசையவும். மாவு காய்ந்துவிடாமல் ஈரத்துணியால் மூடி வைக்கவும். முறுக்கு உரலில் மாவை நிரப்பி, சிறிய தட்டுகளில் வட்ட வடிவில் முறுக்குகளாகப் பிழிந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவிடவும். பின்னர் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை மெதுவாக எண்ணெயில் போடவும்.

மிதமான தீயில் இருபுறமும் திருப்பிப் போட்டு, குமிழ்கள் குறைந்து முறுக்கு பொன்னிறமாகவும் மொறு மொறுப்பாகவும் மாறியதும் எடுத்து ஆறவிடவும்.

கடை அதிரசத்தை மிஞ்சும் வீட்டு அதிரசம்... இந்த முறையில் செய்து பாருங்கள்!