தினத்தந்தி
அத்திப்பழம் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான பழமாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்த அத்திப்பழம், ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக கருதப்படுகிறது. இது விந்தணுக்களின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவலாம்.
மெக்னீசியம் நிறைந்துள்ளதால் நல்ல உறக்கத்திற்கு துணைபுரிகிறது. நல்ல உறக்கம் ஹார்மோன் சமநிலையை பராமரித்து இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மறைமுகமாக உதவுகிறது.
அத்திப்பழம் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அதன் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அத்திப்பழம் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதால், உடலின் பல உறுப்புகளின் செயல்பாடுகள் மேம்படுகின்றன.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் தன்மையும் அத்திப்பழத்திற்கு உள்ளது. இதன் மூலம் உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறையலாம்.
அத்திப்பழத்தை நேரடியாகவோ அல்லது இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதன் மூலமோ அதன் சத்துக்களை எளிதாக பெறலாம்.