தினத்தந்தி
தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக ஒற்றைத் தலைவலி சிலருக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
தலைவலி ஏற்பட்டவுடன் வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது குறித்து கவனம் தேவை. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில வலி நிவாரண மருந்துகளை அதிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ பயன்படுத்தினால் வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருந்தின் வகையைப் பொறுத்து பாதிப்புகளும் மாறுபடலாம்.
சில மருந்துகள் கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். ஏற்கனவே உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எந்தவொரு வலி நிவாரண மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது. சில மருந்துகள் கர்ப்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருத்துவ ஆலோசனை அவசியம்.
தலைவலிக்கு அடிக்கடி மாத்திரை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தலைவலி தொடர்ந்து ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவது முக்கியம். வலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும்.
வலி நிவாரண மாத்திரைகளை சுயமாகவும் தொடர்ந்து பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். தலைவலி அல்லது வேறு வலி அடிக்கடி ஏற்பட்டால், காரணத்தை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.