விரும்பி வேர்க்கடலை சாப்பிடுகிறீர்களா? இதை தவறாமல் தெரிந்துகொள்ளுங்கள்!

தினத்தந்தி

ஏழைகளின் பாதாம் எனப்படும் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற பல சத்துக்கள் உள்ளன. இருப்பினும், இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

அதீத இரத்தப்போக்கு : நிலக்கடலை இரத்த உறைதலை குறைக்கும் தன்மை கொண்டதால், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிலருக்கு மூக்கில் இரத்தம் வடிதல் (சில்லுமூக்கு) பிரச்சனையும் ஏற்படலாம்.

உடல் எடை அதிகரிப்பு : நிலக்கடலையில் அதிக கலோரி உள்ளதால், அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். எனவே, டயட்டில் இருப்பவர்கள் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆற்றல் சமநிலை பாதிப்பு : ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆற்றல் உற்பத்திக்கு அவசியம். நிலக்கடலையில் ஒமேகா-6 அதிகமாக இருப்பதால், சமநிலை குலைய வாய்ப்பு உள்ளது.

அலர்ஜி பிரச்சனை : வேர்க்கடலை சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தலாம். அதிகமாக சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், தோல் சிவத்தல், தொண்டை அல்லது வாயில் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதய நோய் அபாயம் : அதிக அளவில் உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை அதிகரிக்கலாம்.

ஊட்டச்சத்து சமநிலை குறைவு : நிலக்கடலை சத்துகள் நிறைந்தது தான், ஆனால் அதில் உள்ள சத்துக்கள் முழுமையான சமநிலையுடன் இல்லை. அதனால், ஒரே உணவாக அதிகமாக எடுத்துக்கொள்வது சரியல்ல.

இரத்த அழுத்தம் அதிகரிப்பு : உப்புச் சேர்க்கப்பட்ட வேர்க்கடலை அதிகமாக சாப்பிட்டால், உடலில் சோடியம் அதிகரித்து இரத்த அழுத்தம் உயரக்கூடும்.

இரத்த உறைதல் குறைவு : நிலக்கடலையில் உள்ள சில சேர்மங்கள் இரத்தம் உறையும் செயல்பாட்டை குறைக்கலாம். காயம் ஏற்பட்டால் இரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

துளசி மாலை அணிந்தால் கிடைக்கும் ஆன்மீக பலன்கள்!