உலகின் மிகச்சிறிய தீவு நாடான நவ்ரு பற்றி தெரியுமா?

தினத்தந்தி

1. உலகில் மிகச்சிறிய தீவு நாடாக அறியப்படும் நவ்ரு, வெறும் 21 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் வாடிகன் நகரம், மொனாக்காவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது.

2. நவ்ரு, தெற்கு பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே சுமார் 2,900 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் முக்கிய பாஸ்பேட் வள நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது.

3. பாஸ்பேட் சுரங்கத் தோண்டுதலால் நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பு சுண்ணாம்பு பாறைகளாக மாறியுள்ளது. தீவைச் சுற்றி பரந்த பவளப்பாறைகளும் காணப்படுகின்றன.

4. நவ்ருவில் சுமார் 12,500 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அதிகாரப்பூர்வ தலைநகரம் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

5. அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய நிர்வாக மையங்கள் யாரென் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

6. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இன மக்கள் நவ்ருவில் குடியேறினர். 1700-களின் இறுதியில் பிரிட்டிஷ் கப்பல் ஒன்று தீவை அடைந்து, வெளியுலகத்துடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது.

7. 1888-ல் ஜெர்மனி நவ்ருவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நிர்வகித்தன.

8. இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் நவ்ருவை கைப்பற்றியது. அப்போது பலர் கட்டாய தொழிலாளர்களாக மைக்ரோனேஷியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

9. 1968 ஜனவரி 31-ஆம் தேதி நவ்ரு சுதந்திரம் பெற்று இறையாண்மை நாடாக உருவானது. தற்போது காமன்வெல்த் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுநேர உறுப்பினராக உள்ளது.

மலைகளின் மத்தியில் மறைந்திருக்கும் சொர்க்கம் - இந்தியாவின் இத்தாலி!