அன்றாட உணவில் ஏன் செள செள சேர்க்க வேண்டும் தெரியுமா?

தினத்தந்தி

செள செள அதிக நன்மைகளை கொண்ட எளிய காய்கறியாகும். இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரியாமல் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. எனவே இப்போது இதன் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.

இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, போலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

செள செள குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளது என்பதால் இது குறைந்த சர்க்கரை கொண்ட உணவாக உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவானது கணிசமாக குறைவது கண்டறியப்பட்டது.

செள செள காய்கறியில் பொட்டாசியம் மற்றும் ஆல்கலாய்டுகள் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடலில் உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.

செள செள கார்டியோ வாஸ்குலார் நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் கணிசமாக குறைக்கக்கூடும் என கூறப்படுகிறது.

செள செளவில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் அதிகம் வராமல் இருக்கவும் உதவி புரிகிறது.

செள செளவில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

10 கீரைகளும்..அதன் பயன்களும்.!!