தினத்தந்தி
புளி, சுவை மொட்டுகளில் எளிதாக சுவையை உணர்ந்துகொள்ள முடியும். அதனால் தான் பலவிதமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அளவாக இருக்கும் வரை இவை பிரச்சினையில்லை. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
முக்கியமாக புளி சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாவதை ஊக்குவிக்க செய்யும் என்று நிருபனமாகியுள்ளது. இதனால் புளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
புளியை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக உட்கொள்வது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவில் வீழ்ச்சியை உண்டாக்க செய்யும். இதனால் ரத்த சர்க்கரை அளவு குறையக்கூடும்.
புளி ஒரு அமில உணவு. இரைப்பை குழாய் பிரச்சினை, செரிமான பிரச்சினை உள்ளவர்கள் புளியிலிருந்து ஓரளவு விலகி இருப்பது நல்லது. இல்லையெனில் அமிலத்தன்மை அதிகரிக்க செய்யும்.
புளி அதிக அளவு சாப்பிடும்போது அது பற்களின் பற்சிப்பி அமில மூலக்கூறூகளால் அரிக்கப்படுகிறது. இதனால் பற்கள் மோசமான பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
அதிக புளி சேர்க்கும் போது இவை ரத்த நாளங்களை சுருக்கும் செயல்முறையை அதிகரிக்க செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் மெதுவாகிறது அல்லது சில சமயங்களில் முழு அடைப்பையும் உண்டாக்கிவிடுகிறது.
நீங்கள் கண் தொற்றுக்கு ஆண்டி- பயாடிக் எடுத்துகொள்ளும் போது புளி சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. இது மருந்துகளுடன் சேர்ந்து சருமத்துக்கும் கேடுகளை உண்டாக்க செய்யலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
புளியம்பழத்தை சாப்பிட்டால் மட்டும் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. புளி அதிகமாக சேர்க்கும் உணவுகள் கூட இத்தகைய பாதிப்பை உண்டாக்கலாம். எனவே புளி உணவை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.