ஈஸியான சிக்கன் பாப்கார்ன்.. சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி!

தினத்தந்தி

சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம், பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரட் - 4 துண்டுகள், முட்டை - 1, பால் - 1 டேபிள் ஸ்பூன், மைதா - 1/2 கப்.

முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளுடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து பிரட் துண்டுகளை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சியில் பொடியாக அரைத்து ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து, அதனுடன் பாலை சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும். மற்றொரு தட்டில் மைதாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை முதலில் முட்டை கலவையில் தோய்த்து, அடுத்து மைதாவில் புரட்டி, மீண்டும் முட்டை கலவையில் தோய்த்து, இறுதியாக பிரட் தூளில் நன்றாக புரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால், சுவையான மற்றும் கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் தயார்.

அசத்தலான ஆட்டு இரத்தப் பொரியல்!