அசத்தலான ஆட்டு இரத்தப் பொரியல்!

தினத்தந்தி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான உணவுகளில் ஒன்றாக ஆட்டு இரத்தப் பொரியல் இருக்கிறது. காரசாரமான சுவையுடன் சாதத்திற்கு சிறந்த கூட்டாக இது அமையும். வீட்டிலேயே எளிதாக இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: ஆட்டு இரத்தம் - 1 கப், சின்ன வெங்காயம் - 200 கிராம், பச்சை மிளகாய் - 3, சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - அரை கப், கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.

செய்முறை : முதலில் ஆட்டு இரத்தத்தை தண்ணீரில் நன்றாக கழுவி, அதிலுள்ள தண்ணீரை முழுவதும் வடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

சுத்தம் செய்த இரத்தத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் மண் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

அதன்பின் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பிசைந்து வைத்திருக்கும் இரத்தத்தை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.

இரத்தத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி உதிரி உதிரியாக வரும் வரை விடாமல் கிளற வேண்டும். இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான ஆட்டு இரத்தப் பொரியல் தயார்.

இனிப்பான பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி?