தினத்தந்தி
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.
தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.
கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும். ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும்.
உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.