இதயத்தை பாதுகாக்க இந்த சிவப்பு நிற பழங்களை சாப்பிடுங்க!
Dinesh
உலகளவில் அதிகமான மரணங்களுக்கு இதய செயலிழப்புதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனை தடுத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிவப்பு பழங்கள் பற்றி பார்ப்போம்.
credit: freepik
செர்ரி: செர்ரி பழங்களை சாலட்டுகளில் சேர்த்தோ, பிற உணவு பதார்த்தங்களில் கலந்தோ உட்கொள்ளலாம். அவை ரத்த நாளங்களை பாதுகாக்க உதவிடும்.
credit: freepik
ராஸ்பெர்ரி: இந்த பழமும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இயற்கையின் இனிப்புகள் என்று அழைக்கப்படும் இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் துணை புரியும்.
credit: freepik
தக்காளி: வாரத்திற்கு 5 முறைக்கு மேல் தக்காளி போன்ற லைகோபீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, இதய நோய் அபாயத்தை 26 சதவீதம் குறைக்கும் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
credit: freepik
ஆப்பிள்: ஆப்பிள் சாப்பிடுவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை குறைப்பதோடு தொடர்புடையது என்று அமெரிக்காவின் லோவா மகளிர் சுகாதார ஆய்வகம் தெரிவிக்கிறது.
credit: freepik
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தை தினமும் சாப்பிடுவது இதயத்தை பலப்படுத்தும். அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பெக்டின் நொதி போன்றவை கெட்ட கொழுப்பை குறைக்கும்.
credit: freepik
மாதுளை: இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.