காலை எழுந்தவுடன் மீண்டும் தூக்கம் வருகிறதா?

காலை எழுந்தவுடன் மீண்டும் தூக்கம் வருகிறதா?

Published on
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகுக்கிறது. மனிதன் மட்டுமல்ல; எந்த உயிரினமான இருந்தாலும் தூக்கம் அவசியம் தேவை.
தினமும் 7 - 8 மணிநேரம் தூங்கியிருந்தாலும்கூட காலை எழுந்திருக்க முடிவதில்லை. சில வாழ்க்கைமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் தூக்க பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம்: நமது உடல் சர்க்கார்டியன் சுழற்சியில் இயங்குகிறது. அதன்படி நாம் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். இந்த சுழற்சியை பின்பற்றாவிட்டால், தூங்குவதற்கும், எழுந்திருப்பதற்கும் சிரமமாக இருக்கும்.
snooze செய்யக்கூடாது: காலை அலாரம் அடித்தவுடன் அதை snooze செய்துவிட்டு தூங்குவது. இந்த பழக்கம் மேலும் தூக்க உணர்வையும், சோர்வையும் கொடுக்கும். எனவே காலை அலாரம் அடித்தவுடன் snooze பட்டனை தொடாமல் எழுந்திருப்பது நல்லது.
தொந்தரவான சூழலில் தூங்குவதை தவிர்த்தல்: சத்தம் அதிகமாக இருக்கும் இடம் அல்லது அசவுகர்யமாக இடங்களில் தூங்கும்போது முழுமையான தூக்கம் கிடைக்காது. இதனால் காலை எழுந்தவுடன் மிகவும் சோர்வாகத்தான் இருக்கும்.
கபைன் பானங்கள்: பகலில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது இரவு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற பானங்களை மாலை நேரத்திற்கு பிறகு முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
சில ஆரோக்கிய குறைபாடுகளால் தூக்கப் பிரச்சினைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com