மாசி கருவாடு சாப்பிட்டால் – இவ்வளவு நன்மையா!

தினத்தந்தி

மாசி கருவாடு என்பது பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று. குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்த உதவும் உணவாகவும் இது கருதப்படுகிறது.

கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி (சூரை மீன்) மூலம் தயாரிக்கப்படும் இந்த கருவாடு, மற்ற கருவாடுகளைப் போல அல்லாமல் அவித்து காயவைத்து தயாரிக்கப்படுகிறது. இதனால் தனித்துவமான நிறம், மணம் மற்றும் சுவை கிடைக்கிறது.

பாரம்பரியமாக, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் இது கொடுக்கப்பட்டு வந்தது.

ஆண்களுக்கு இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என கூறப்படுகிறது.

மாசி கருவாடு வாத, பித்த, கப சமநிலையை பேண உதவும் என பாரம்பரிய வைத்தியத்தில் குறிப்பிடப்படுகிறது.

கவனம்: இவை பெரும்பாலும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன. எந்தவொரு உடல்நல பிரச்சினைக்கும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

தினமும் யோகா ஏன் அவசியம்?