தினத்தந்தி
தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி - 1 ½ கப், தேங்காய் - 1, வடித்த அரிசி சோறு - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி, தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டவும். தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மிக்சி ஜாரில் ஊற வைத்த அரிசி, வடித்த சாதம், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இந்த மாவை தோசை மாவை விட சற்று நீர்ப்பாக இருக்கும்படி, தேவையான அளவு தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி வேகவைப்பது போல ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் சற்று குழிவான தட்டை வைக்கவும். தட்டில் சிறிதளவு நெய் தடவவும்.
பின்னர் ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி 3–4 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் அதன் மேல் சிறிதளவு நெய் தடவவும்.
அதன் மேல் மீண்டும் ஒரு கரண்டி மாவு ஊற்றி மூடி வேகவிடவும். இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக தொடர்ந்து தட்டு நிரம்பும் வரை செய்யவும்.
கடைசியாக மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு, தட்டின் ஓரங்களை நெய் தடவிய கத்தியால் தளர்த்தி, தலைகீழாக கவிழ்த்து எடுக்கவும். பின்னர் இதனை ஒவ்வொரு இதழாகப் பிரித்து பரிமாறலாம்.