தினத்தந்தி
மாலை வேளையில் டீ, காபியுடன் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா செய்து சாப்பிடலாம். எளிமையாக செய்யக்கூடிய இந்த பக்கோடா மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
செய்முறை; காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்த சூடான நீரில் போட்டு 10–15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் நன்கு முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார். இதனை மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சூடாகப் பரிமாறலாம்.
பக்கோடாவை எண்ணெயில் போடும்போது வாணலியில் அதிகமாக சேர்க்காமல், சிறிது சிறிதாகப் போட்டு பொரித்தெடுத்தால் அனைத்து துண்டுகளும் சமமாக வேகுவதுடன் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.