மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் கட்லெட்!

தினத்தந்தி

மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான பன்னீர் கட்லெட்டை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். பன்னீரில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நீரிழிவு உள்ளவர்கள் தங்களது உணவுத் தேவைக்கு ஏற்ப, அளவோடு பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்; பன்னீர் - 500 கிராம், மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, வெங்காயம் - 4, பச்சை மிளகாய் - 7, கறிவேப்பிலை - 2 கொத்து, இஞ்சி-பூண்டு விழுது - 1½ மேஜைக்கரண்டி, சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி, மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு - 3.

பொரிக்க தேவையானவை: சோள மாவு - 4 மேஜைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, பிரெட் தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பன்னீரை துருவி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து சோம்புத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

பன்னீர் கலவை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் இந்தக் கலவையை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவில் தட்டையாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியான கரைசல் தயாரிக்கவும்.

ஒவ்வொரு கட்லெட்டையும் முதலில் சோள மாவுக் கரைசலில் முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் நன்றாகப் புரட்டி வைத்துக் கொள்ளவும். இதேபோல் அனைத்து கட்லெட்டுகளையும் தயார் செய்து கொள்ளவும்.

பாரம்பரிய பால்கோவா செய்வது எப்படி?