மாலை நேர டிபன்: சுவையான ரவா கிச்சடி செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: ரவை - 250 கிராம், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - 1 கப், கேரட் - 1, வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1, மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாகவும் மணம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பிறகு பட்டாணி, கேரட் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து காய்கறிகள் மென்மையாகும் வரை வதக்கவும்.

காய்கறிகள் வெந்ததும் ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறவும். கட்டி பிடிக்காமல் கவனமாக கிளறி, ரவை முழுமையாக வெந்து உதிரியாக வரும் வரை சமைக்கவும்.

இறுதியாக வறுத்த முந்திரிப்பருப்பை மேலே தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

சுவையான, மணமான ரவா கிச்சடி தயார். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும், மாலை நேர சிற்றுண்டியாகவும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆரோக்கியமான ராகி லட்டு செய்வது எப்படி?