பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், எள், முட்டைக்கோஸ், பிரக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகளில கால்சியம் சத்து உள்ளது.கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி கீரை போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது..உணவுகளில் சோயாபீன், அத்திப்பழம், பேரீச்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது..பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், பீன்ஸ், பாதாம் பால் சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்..கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்..முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது..பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால், இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..Explore