கேரட்-கண்: சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போன்ற தோற்றத்துடன் இருக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது.
credit: pixabay
தக்காளி-இதயம்: இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்ட தக்காளியில், இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, நிறைந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பையும் கட்டுப்படுத்தும்.
credit: pixabay
வால்நட்-மூளை: வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். இதில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்த உதவும்.
credit: pixabay
கிட்னி பீன்ஸ்-சிறுநீரகம்: இந்த பீன்சின் பெயர் முதல் வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.
credit: pixabay
சர்க்கரை வள்ளிக்கிழங்கு-கணையம்: கணையத்தின் வடிவத்தை ஒத்திருக்கும் இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.
credit: pixabay
இஞ்சி-வயிறு: இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல்வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும்.
credit: pixabay
காளான்-காது: காளானை இரண்டாக வெட்டினால் காதுகளை போலவே காட்சியளிக்கும். இதில் இருக்கும் வைட்டமின் டி, செவிப்புலன் இழப்பை தடுக்க உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
credit: pixabay
புரோக்கோலி-புற்றுநோய்செல்கள்: புரோக்கோலியின் தலைப்பகுதி புற்றுநோய் செல்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். இது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 45 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது.