தாய்மார்களுக்கு பயனுள்ள அசத்தலான சமையல் டிப்ஸ்..!

தினத்தந்தி

காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவை விரைவில் கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.

ஏலக்காய், கிராம்பு, மிளகு போன்ற மசாலா பொருட்களை ஒரே டப்பாவில் மூடி வைத்தால் வாசனையும் தரமும் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

உலர் திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் வைக்கும் டப்பாவில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் அவை விரைவில் கெடாமல் பாதுகாக்கப்படும்.

மூலிகைகள் மற்றும் கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நேரம் பசுமையாக இருக்கும்.

அரைத்த மிளகாய்த் தூள் டப்பாவின் நடுவில் இரண்டு மிளகாய் வற்றல் அல்லது சிறிதளவு பெருங்காயம் வைத்து வந்தால் தூளின் நிறமும் தரமும் மாறாமல் இருக்கும்.

ஆப்பிளை நறுக்கி சர்க்கரை கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீக்கு நல்ல மணமும் தனி சுவையும் கிடைக்கும்.

பச்சை நிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்தால் காய்கறியின் நிறம் மாறாமல் இருக்கும்.

சுவையான பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி?