வெயிலால் சோர்வா? கற்றாழை ஜூஸ் குடித்து புத்துணர்ச்சி பெறுங்கள்!

தினத்தந்தி

தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் உடலை மிகவும் பாதித்து வருகிறது. இதனால் நீரிழப்பு, செரிமானக் கோளாறுகள் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் இயற்கை வைத்திய முறைகளை நாடுவது மிகவும் அவசியமாகிறது.

அதில் முக்கியமான ஒன்று கற்றாழை. பொதுவாக சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படும் கற்றாழை, உடல்நலத்திற்கும் பல நன்மைகள் தரும். குறிப்பாக, கோடைகாலத்தில் கற்றாழை ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாக செயல்படுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: கற்றாழை ஜெல்லை சுத்தமாக கழுவி உட்கொண்டால், அது செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. வெப்பத்தால் ஏற்படும் குடல் பிரச்சனைகளுக்கு இது சிறந்த இயற்கை தீர்வாகும்.

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்: கற்றாழையில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் கிளைகோபுரோட்டின்கள் உடல் சூட்டை குறைத்து, குடலில் ஏற்படும் வீக்கத்தையும் தணிக்க உதவுகின்றன.

வீக்கத்தை குறைக்கும்: லிபேஸ் மற்றும் அமிலேஸ் போன்ற நொதிகள் கற்றாழையில் உள்ளதால், உணவை எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது. இதனால் வயிற்றுப் புண், வீக்கம் போன்றவை குறைகின்றன.

நச்சுக்களை வெளியேற்றும் (Detox): கற்றாழை ஒரு இயற்கை டிடாக்ஸ் பானமாகும். இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம்: கற்றாழை சாறு கல்லீரலை சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றமும் சீராக நடைபெறும்.

அதிக அளவில் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பிணிகள் அல்லது உடல் நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி பிறகு பயன்படுத்துவது நல்லது.

மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்!