தினத்தந்தி
சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்புகள்; அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பொருட்கள் கொலாஜனை கடினமாக்கி சரும சுருக்கங்களை விரைவுபடுத்த துணைபுரியும்.
சர்க்கரை பானங்களை பொறுத்தவரை சர்க்கரை யுடன் அதிக கலோரிகளையும் கொண்டிருக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த சர்க்க ரையை அமிலங்களாக சிதைக்கும். அந்த அமிலங்கள் பற்களின் எனாமலை பாதிப்படைய செய்து வயதானவர் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.
இறைச்சிகள்; கிரில், வறுத்தல், சுடுதல் என அதிக வெப்பத்தில் தயார் செய்யப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்வது சருமத்திற்கு பாதகமாகவே அமையும். இறைச்சி வகைகளை அதிக வெப்பத்தில் வறுத்தோ, சுட்டெடுத்தோ உட்கொள்வது மேம்பட்ட கிளைகே ஷனை உற்பத்தி செய்யும்.
இந்த சேர்மங்கள் ஆன்டிஆக்சிடென்ட் அழுத்தத்தை ஊக்குவித்து, சருமத்தை பொலிவிழக்க செய்து அதன் நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கும். இதனால் சருமம் விரைவில் வயதாகும் தோற்றப்பொலிவுக்கு மாறும்.
சுத்திகரிக்கப்பட்ட மாவு; மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் முழு தானியங்களில் காணப்படுவது போல் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ போதிய அளவில் இருப்பதில்லை.
இவை இன்சுலின் அளவை வேகமாக உயர்த்தி உடல் முழுவதும் அழற்சியை உண்டாக்கி, சருமம் விரைவில் முதிர்வுத்தன்மைக்கு மாற வழிவகை செய்கின்றன.
அரிசி பிஸ்கெட், கேக்குகள்; அரிசியில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட், கேக்குகள் சிறந்த சிற்றுண்டிகளாக கருதப்பட்டாலும் அவை அதிக கிளைசெமிக் குறியீடுகளை கொண்டுள்ளன. அதனால் குளுக்கோஸை திடீரென அதிகரிக்க செய்துவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் வேகமாக உயர்த்தக்கூடும்.
மேலும் சருமத்தில் எண்ணெய் பசைத்தன்மையை சீரற்றதாக்கி, சருமத்தை மந்தமான தன்மைக்கு மாற்றிவிடும். சருமத்தின் பொலிவையும் குறைய செய்துவிடும். இதனை தவிர்க்க புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட குறைந்த கிளை செமிக் குறியீடுகளுடைய முழு தானியங்களை உட்கொள்ளலாம்.