தினத்தந்தி
தினமும் சாதம் சாப்பிடுவது கூட ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதில்லை.
தொடர்ந்து அதிக அளவில் சாதம் உட்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாதத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
ரொட்டி வகையை சேர்ந்த நாண், பூரி போன்றவை கிளைசெமிக் குறியீட்டை அதிகம் கொண்டவை. அதனால் அவற்றை அடிக்கடி உட்கொள்ளக்கூடாது.
பிரெஞ்ச் பிரைஸ், உருளைக்கிழங்கு மசாலா, ஆலு மசாலா சாப்பிடுவதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.
பழச்சாறுகள் குறிப்பாக பாட்டில்களில் அடைக்கப்பட்டவை ரத்த சர்க்கரையை உயர்த்தக்கூடும். பழங்களில் காணப்படும் தேவையான நார்ச்சத்து அவற்றில் இல்லாததால், ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க செய்துவிடும்.
சமோசா, பக்கோடா போன்ற, தேநீருடன் அடிக்கடி உண்ணப்படும் மொறுமொறுப்பான மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன.
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், நாட்டுச்சக்கரையை சிலர் பயன் படுத்துகிறார்கள். ஆனால் அவையும் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை. இயற்கையாகவே இனிப்பானது, தாதுக்கள் நிறைந்தது என்றாலும் நீரிழிவு நோயாளிகள் அதை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.