மறைமுகமாக ஸ்கின் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்!

தினத்தந்தி

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுக்கும் உடலில் நடைபெறும் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உணவில் உள்ள புரத அமைப்பு, ஹிஸ்டமைன் பண்புகள் மற்றும் அழற்சியைத் தூண்டும் மூலக்கூறுகள் சில நேரங்களில் சரும அழற்சியை ஏற்படுத்தலாம்.

சிப்பி: சிப்பியில் உள்ள சில புரதங்களை நோயெதிர்ப்பு மண்டலம் ஏற்காததால், சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.

நட்ஸ்: நட்ஸ் வகைகள் சிலருக்கு சரும அழற்சியை ஏற்படுத்தலாம். குறிப்பாக வேர்க்கடலை அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தூண்டலாம்.

பசும்பால்: பசும்பாலில் உள்ள கேசின் மற்றும் whey புரதங்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தி, எக்ஸிமா போன்ற தோல் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

முட்டை: முட்டையில் உள்ள புரதங்கள் சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி, சொறி, சிரங்கு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.

கோதுமை: கோதுமையில் உள்ள குளுட்டன் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தி, தோலில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம்.

மீன்: சில மீன்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தலாம். கருவாடாக பதப்படுத்தும்போது இந்த பாதிப்பு அதிகரிக்கலாம்.

எள்: எள் பொதுவாக பாதுகாப்பானது. ஆனால் சிலருக்கு மட்டும் தோல் பிரச்சினைகள் தோன்றலாம்.

இவை அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாதிப்பை ஏற்படுத்தாது; உடல் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

கச்சா எண்ணெய் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமா?