கச்சா எண்ணெய் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமா?

தினத்தந்தி

கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பொருளும் நமது அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகிறது. எதிலிருந்து என்ன பயன் கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெட்ரோலிய வாயு (LPG): இது மிகக் குறைந்த கொதிநிலையைக் கொண்டது. நாம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும் LPG சிலிண்டர்களிலும், தொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் பயன்படுகிறது.

பெட்ரோல் (Gasoline): கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய இயந்திரங்களை இயக்குவதற்கான முதன்மை எரிபொருளாகும்.

நாப்தா (Naphtha): இது நேரடியாக எரிபொருளாகப் பயன்படாதிருந்தாலும், பிளாஸ்டிக், மருந்துகள் மற்றும் பெயிண்ட் போன்ற வேதிப்பொருட்களை தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

மண்ணெண்ணெய் (Kerosene): இது வீடுகளில் விளக்கு எரிக்கவும், சமைக்கவும் பயன்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விமான எரிபொருளாக (Jet Fuel) பயன்படுத்தப்படுகிறது.

டீசல் (Diesel): லாரிகள், பேருந்துகள், ரயில்கள் மற்றும் விவசாய பம்ப்செட்டுகளை இயக்கப் பயன்படுகிறது.

மசகு எண்ணெய் (Lubricating Oil): இயந்திரங்களின் பாகங்கள் உரசிக் தேயாமல் இருக்கப் பயன்படும் கிரீஸ் மற்றும் ஆயில் இதிலிருந்து கிடைக்கின்றன.

தார் (Bitumen): இது கடைசியாகத் தங்கும் தடிமனான கழிவாகும். இது சாலைகள் அமைக்கவும், கூரைகளில் தண்ணீர் கசியாமல் இருக்க வாட்டர் புரூஃபிங் செய்யவும் பயன்படுகிறது.

நாம் பயன்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் (Vaseline, Lip balm), வாசனைத் திரவியங்கள் மற்றும் நாம் உடுத்தும் பாலியஸ்டர் துணிகள் கூட பெட்ரோலியப் பொருட்களின் துணை தயாரிப்புகளிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு பச்சை திராட்சை கொடுக்கலாமா?