நிம்மதியாக உறங்க இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

தினத்தந்தி

ஆரஞ்சு பழம் - ஆரஞ்சு பழம் ஆரோக்கியமானதுதான். ஆனால் அதிக அளவு சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இரவில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினையை அதிகரிக் கக்கூடும்.

photo: magnific

தக்காளி - சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் தக்காளியில் மிகுந்துள்ளன. அதனால் இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ் அதிகம் சேர்த்துக்கொள்வது வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

photo: magnific

புராக்கோலி-காலிபிளவர் - இந்த இரண்டு காய்கறிகளும் உடல் நலத்திற்கு சிறந்தவைதான். ஆனால் இரவில் புராக்கோலியையோ, காலிபிளவரையோ சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.

photo: magnific

டார்க் சாக்லெட் - டார்க் சாக்லெட்டில் காபின் உள்ளது. இது மூளையை விழித்திருக்க செய்யும் ஆற்றல் கொண்டது. அப்படியிருக்கையில் இரவில் டார்க் சாக்லெட் சாப்பிடுவது தூக்கம் வருவதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

photo: magnific

பாதாம்-முந்திரி - பாதாம், முந்திரி இவை இரண்டும் ஆரோக்கியமானவைதான். ஆனால் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. இவற்றை இரவில் சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். வயிற்றை கனமாக உணரச் செய்யும்.

photo: magnific

தயிர் - இது கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருள். ஆனால் இரவில் உட்கொள்வது சிலருக்கு வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் செரிமான மண்டலம் உணர்திறன்மிக்கதாக (சென்சிட்டிவ் ஸ்டொமக்) இருப்பவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.

photo: magnific

மசாலா பொருட்கள் - இரவு உணவில் அதிகப்படியான மசாலா பொருட்களை சேர்த்து சாப்பிடுவது வயிற்று எரிச்சலை அதிகரிக்க செய்யும். அதனால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன் இரவில் நிம்மதியாக உறங்க முடியாது.

photo: magnific
வீட்டுக்குள் பூரான் நுழைவதன் பின்னணி என்ன?