தினத்தந்தி
இஞ்சி மற்றும் பூண்டு; இஞ்சியும், பூண்டும் மருத்துவ குணங்கள் மிக்கவையாக இருந்தாலும், அவை இயற்கையாகவே அதிக வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அதிலிருக்கும் ஜிஞ்சரால், அலிசின் போன்ற சேர்மங்கள், ரத்த ஓட்டத்தைத் தூண்டி வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்க செய்துவிடும்.
வெப்ப அலையின் போது அவற்றை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தி, நீரிழப்பை உண்டாகக்கூடும். எனவே அளவோடுதான் பயன்ப டுத்த வேண்டும்.
மிளகாய்; மிளகாய்களில் கேப்சைசின் உள்ளது. இது உடல் அதிக வெப்பமடைவதாக மூளையை நம்ப வைக்கக்கூடியது. கோடைகாலங்களில் சமையலில் அதிகப்படியான மிளகாய் சேர்த்துக்கொள்வது செரிமான பாதையின் உட்புறச் சுவரில் எரிச்சலை ஏற்படுத்தி வயிற்று பகுதிக்குள் வெப்பம் உருவாக்கும்.
கீரைகள்; பாலக்கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை கோடை காலத்தில் சிறுநீரகங்களை கடினமாக வேலை செய்ய வைத்துவிடும். செரிமான அமைப்பு அதிகம் வேலை செய்யாமல் இருக்க கோடை காலத்தில் கீரைகளை குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் போன்ற காய்கறிகளை உட்கொள்வது சிறந்தது.
வெங்காயம்; இது குளிர்ச்சிக்கு உதவும் என்றாலும் அதில் இருக்கும் கந்தகம் உடலுக்குள் அதிக வெப்பத்தை உண்டாக்கும். வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.
கேரட் மற்றும் முள்ளங்கி; கேரட் மற்றும் முள்ளங்கிகள் அடிப்படையில் குளிர்காலப் பயிர்களாகும். இவற்றில் கோடைக்கால காய்கறிகளை போன்று அதிக நீர்ச்சத்து இருப்பதில்லை. இவைகளை அதிகம் உட்கொள்ளும்போது செரிமானத்திற்கு அதிக நீர் தேவைப்படும்.
சேனைக்கிழங்கு போன்ற வேர்க்காய்கறிகள; கோடை காலத்தில் செரிமான செயல்திறன் இயற்கையாகவே குறைவாக இருக்கும்போது, சேனைக்கிழங்கு போன்ற கனமான, மாவுச்சத்து நிறைந்த வேர்க்காய்கறிகளை உடல் செரிப்பது கடினம். பெரும்பாலும் மந்தநிலை மற்றும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை.