Subash T
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்த விஜய்யின் அரசியல் பயணம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர்களுடன் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜய் பங்கேற்றார். இது அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டது.
2009-ல் உருவாக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வழிநடத்தினார். அதே ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பேசிய விஜய், “தேவையான நேரத்தில் அரசியலுக்கு வருவேன்” என்று அறிவித்தார்.
அதே 2009-ஆம் ஆண்டு டெல்லி சென்ற விஜய், ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் 2011-ல் அண்ணா ஹசாரே முன்னெடுத்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவித்தார்.
இதே ஆண்டில் இலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக விஜய் போராட்டம் நடத்தினார். சமூக மற்றும் மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினார்.
2014-ல் கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த Narendra Modiயை விஜய் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
2018-ல் கஜா புயல் பாதிப்பின்போது அரசுக்கு நிதி வழங்காமல், நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் நிவாரண உதவிகளை வழங்கினார்.
பிப்ரவரி 2024-ல் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2026 மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார்.