முதல்-அமைச்சர் விஜய் முதல் பிரதமர் மோடி வரை..கடைசி 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

தினத்தந்தி

✦ எவ்வளவு உயரம் சென்றாலும் சில வலிகளை மறக்க முடியாது. என் வாழ்க்கையில் அதிக வலி கொடுத்தது கரூர் சம்பவம் என முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

✦ அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடியை நேரில் வந்து வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

✦ தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

✦ கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவுச்சின்னம்; தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

✦ தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனை

✦ கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்

✦ உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

✦ 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் முசாலா மத வழிபாட்டு தலத்தில் அலி காமேனியின் உடல் நேற்று அடக்கம்

✦ கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கேரட் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் சுவையான கேரட் பொரியல்!