மலச்சிக்கல் முதல் சரும நலம் வரை – நாவல்பழம் பயன்கள்!

தினத்தந்தி

நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் காணப்படுகிறது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு முக்கிய அம்சமாகும்.

நாவல்பழம் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவும்.

சிறுநீரகங்கள் சீராக செயல்பட நாவல்பழம் உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

மூலநோய் உள்ளவர்கள் நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதன் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றில் நிவாரணம் கிடைக்கும்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மதிய உணவுக்குப் பிறகு நாவல்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்க உதவும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதைத் தவிர்க்க விரும்புவோர் நாவல்பழத்தை சாப்பிடலாம்.

நாவல்பழம் வியர்வையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சரும நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மாசி கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா!