இந்தியா முதல் அமெரிக்கா வரை..கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி - இந்தியா கடும் கண்டனம்

✦ ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது `கிரேட் ஈஸ்டர்ன்' என்ற 3-வது எண்ணெய் கப்பல்

✦ ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் ராஜினாமா.

✦ வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கிம் ஜாங் உன். 0.07% மட்டுமே எதிர்ப்பு.

✦ பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

✦ தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு; ஒரு சவரன் ரூ.1,16,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,570-க்கும் விற்பனை!

✦ “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி” - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

✦ திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

5 நிமிடத்தில் ரெடி ஆகும் சுவையான வெஜ் சாண்ட்விச்!