தினத்தந்தி
✦ "தமிழக வளர்ச்சிக்காகவே நாங்கள் இரவும், பகலும் உழைக்கிறோம். மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு!" - பிரதமர் மோடி
✦ முதல் 20 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; 28ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதல்!
✦ வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் 215 சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்கள் மூடல்!
✦ ஈரானின் அனுமதியை பெற்று ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து 1,35,335 டன் கச்சா எண்ணெயை சுமந்து கொண்டு முதல் கப்பல் மும்பை வந்தடைந்துள்ளது.
✦ தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✦ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ஒரு படகுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
✦ தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு!
✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.1,19,760-க்கும், ஒரு கிராம் 14,970-க்கும் விற்பனை!
✦ நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவிலில் வாய்த்தகராறில் 16 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 11-ஆம் வகுப்பு மாணவரால் பரபரப்பு.
✦ "நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. டீலர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் எரிபொருள் அளவை குறைக்கவில்லை!" - எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்