தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை...கடைசி 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

தினத்தந்தி

✦ தொகுதி மறுசீரமைப்பால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது. வார்த்தைகளில் நான் விளையாடவில்லை. இதை உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்!” - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

✦ த.வெ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்; முதல் பிரதி விவசாயிக்கும், 2-ஆம் பிரதி ஆசிரியைக்கும், 3-ஆம் பிரதி ஆட்டோ ஓட்டுநருக்கும் வழங்கப்பட்டன!

✦ சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக நாளை தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி; பொன்னேரி, சோளிங்கர், துறையூர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்!

✦ பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ் அதிரடி... மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி!

✦ ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது

✦ இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு; இதோடு சேர்த்து 10 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் பெருமிதம்

✦ தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது

✦ தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

✦ மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள் - எம்.பி. கனிமொழி

காலையில் இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!