உள்ளூர் முதல் உலகம் வரை..கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு. ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை

ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்சி மிரட்டல்; 3 - 0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி அபார வெற்றி!

திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது சென்னை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் சந்திப்பு!

ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த கடனளவில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடன். ரூ. 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகை - அமைச்சர் மரிய வில்சன்

சிரப் மருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விதிவிலக்கை நீக்கியது மத்திய அரசு. இதன்படி தன்னிச்சையாக இருமல் மருந்துகளை விற்கத் தடை விதிப்பு.

மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு.

திருச்சி கிழக்கில் முதல்-அமைச்சர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தித்திப்பான தேங்காய் பால் பணியாரம்!