விஜய் முதல் டிரம்ப் வரை.. கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ "60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500. குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்!" - த.வெ.க. மகளிர் தின விழாவில் விஜய் அறிவிப்பு

✦ கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை; கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு!

✦ டி20 உலகக்கோப்பையை 3-ஆவது முறையாக வென்று வரலாறு படைக்குமா இந்தியா? - நியூசிலாந்துடன் இன்று இரவு மோதல்

✦ நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

✦ ஈரான்; தலைநகர் தெஹ்ரான், அல்புரோஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று இரவு வான்வழி தாக்குதல்

✦ தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி பாரன்ஹீட் (39.6 செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது.

✦ "ஓ.பன்னீர்செல்வம் என்றால் நினைவுக்கு வருவது விசுவாசம். எடப்பாடி பழனிசாமி என்றால் நினைவுக்கு வருவது துரோகம்!" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

✦ "அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய மகளிருக்கு இலவசம். பெண்களுக்காக தனி இலாகா உருவாக்கப்பட்டு, எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்!" - த.வெ.க. மகளிர் தின விழாவில் விஜய் அறிவிப்பு

✦ ஈரான் மீது இன்று வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை மேலும், ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் டிரம்ப் கூறிவருகிறார்.

தமிழக கவர்னர் மாற்றம்.. எந்த மாநிலத்துக்கு யார்?