நீண்ட ஆயுளுக்கு தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள்!

தினத்தந்தி

புளூ பெர்ரி: ரத்த நாளங்களின் பாதுகாவலர் - தினமும் ஒரு கப் (சுமார் 150 கிராம்) புளூபெர்ரி சாப்பிட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகவும், தமனி செயல்பாடு சிறப்பாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதுது.

இதை சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ரத்த நாளங்களில் ஒரு மெல்லிய உள் அடுக்கு (எண்டோதீலியம்) உள்ளது. அது ஆரோக்கியமாக இருக்கும்போது, ரத்த நாளங்கள் சீராகத் திறந்து மூடும். புளூபெர்ரி அந்த அடுக்கு சீராக செயல்பட வைக்கும். ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்தக் கட்டிகளை தடுக்கவும் செய்யும்.

ஆப்பிள்: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் - ஆப்பிள்களில் பெக்டின் எனப்படும் சிறப்பு நார்ச்சத்தும், ரத்த ஓட்டத்தை தூய்மைப்படுத்தும் குழுக்களாக செயல்படும் பாலிபீனால்கள் போன்ற சேர்மங்களும் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே வெளியேற்ற உதவிடும்.

தினமும் சுமார் 100 முதல் 150 கிராம் அளவு கொண்ட ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொலஸ்ட்ரால் என்பது ரத்த குழாய் சுவர்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தை தடுக்கும் அழுக்கு போன்றது. ஆப்பிள் அந்த அழுக்கு ஒட்டுவதற்கு முன்பே அகற்றிவிடும் தன்மை கொண்டது.

ஆரஞ்சு பழம்: ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் - ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களை பாதுகாக்கும். அதிலிருக்கும் பொட்டாசியம் உடலில் சேரும் அதிகப்படியான உப்பை அகற்ற உதவிடும். இவை இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க துணை புரியும்.

உலகளவில் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் விகிதம் குறைவாக இருப்பதும், அவர்கள் நீண்ட காலம் வாழ்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகிய இரண்டுமே ஆரோக்கியமான ரத்த நாளங்களின் செயல்பாட்டிற்கு நேரடியாக உதவுகின்றன. பொட்டாசியம், ரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்தக்கூடியது. வைட்டமின் சி, ரத்த குழாய்களை வலுவாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவும்.

வெற்றிகரமான மனிதர்களின் முக்கிய பண்புகள்!